ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் இன்று சென்னையில் போர் தொழில் படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இப்படத்தின் விநியோகஸ்தர் மேடையில் " இந்த படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது" என கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் அசோக் செல்வன் சினிமா வாழ்க்கையில் அதிகபட்ச வசூலித்த செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.