இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில், தற்போது கமல் ஹீரோவாக நடிக்கும் படத்தில் சிம்பு வில்லனாக நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சிம்புவின் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி வந்தது. ஆனால் அந்த படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234 வது படம் என்றும், அந்த படத்தில் தான் சிம்பு வில்லனாக நடிக்க போகிறார் என்று தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தனது ஐம்பதாவது படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் சிம்பு. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் செவந்த வானம் படத்தில் சிம்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.