கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
கன்னட சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் சூரஜ் குமார்(24). கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் உறவினரான இவர் மைசூரில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் சென்றுள்ளார். மைசூர் - குண்ட்லுப்பேட்டை நெடுஞ்சாலையில் பேகுர் என்ற இடம் அருகே டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவரது உயிரை காப்பாற்றும் பொருட்டு பலத்த காயமடைந்த அவரின் வலது காலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
சூரஜ் குமார் சினிமாவிற்காக தனது பெயரை துருவன் என மாற்றினார். அவர் நடித்துள்ள 'பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா' என்ற படம் சில பிரச்னைகளால் ரிலீஸாவதில் தாமதமாகி உள்ளது. அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த சூழலில் அவர் கால்களை இழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.