வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'லியோ'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் வெளியானது. அப்பாடல் வெளியாவது குறித்த அறிவிப்பு போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிக்கும்படி இருந்ததால் அதற்கு எதிர்ப்பு எழுந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதற்கு நேரடியாகவே கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதன்பின் பாடல் வெளியானதும் அதிலுள்ள வரிகள் குடிப்பது பற்றிய வரிகளாகவும், புகை பிடிப்பது பற்றிய வரிகளாகவும் இருப்பதற்கும் எதிர்ப்பு எழுந்தது. “பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,” என்ற வரிகளும் “மில்லி உள்ள போனா போதும், கில்லி வெள்ல வருவான்டா,” என்ற வரிகளும், “பத்த வச்சி புகைய விட்டா பவர் கிக்கு,” என்ற வரிகள் இப்போது சர்ச்சையை ஏற்படுததியுள்ளன. இந்த லிரிக் வீடியோ முழுவதுமே விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளே இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து போதைப் பொருள் பயன்பாட்டை மையப்படுத்தியே படங்களை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு அவர் இயக்கிய “கைதி, மாஸ்டர், விக்ரம்” ஆகிய படங்களின் மையக்கரு போதைப் பொருள் கடத்தல் பற்றியதுதான். இந்த 'லியோ' படத்திலும் அதே போதைப் பொருள் கடத்தல்தான் மையக் கரு என்கிறார்கள். இதைத்தான் ஒரு ரசிகர் கூட்டம் 'எல்சியு' எனக் கொண்டாடி வருகிறது.
போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இந்தப் பாடல் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஒரு திரைப்படப் பாடல் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க முடிகிறதோ இல்லையோ தணிக்கைத் துறை நடவடிக்கை எடுக்கலாம். இப்படம் சென்சாருக்கு வரும் போது பாடலில் உள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கச் சொல்ல வாய்ப்பிருக்கிறது.