'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் கதாநாயகனாக வளர்ந்து ஓரிரு ஹிட் படங்களைக் கொடுத்தார். ஆனால், அவர் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த “சபாபதி, குலு குலு, ஏஜன்ட் கண்ணாயிரம்” ஆகிய படங்கள் பெரும் தோல்விப் படங்களாக அமைந்தன. இருப்பினும் ஓரிரு படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். அவற்றில் ஒரு படம் 'தில்லுக்கு துட்டு' படத்தின் மூன்றாம் பாகம். ஏற்கெனவே அப்பெயரில் வெளிவந்த இரண்டு பாகங்களும் ஹிட் படங்களாக அமைந்தன. அதே பெயரை மீண்டும் வைப்பதற்கு சிக்கல் ஏற்பட்டதால் படத்தின் பெயரை 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்று வைத்தார்கள். அதாவது 'டேர் டெவில் ரிட்டர்ன்ஸ்'. அதை 'தில்லுக்கு துட்டு ரிட்டர்ன்ஸ்' என்றும் கூட அழைத்துக் கொள்ளலாம்.
அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறதாம். இந்நிலையில் படத்திற்கான வியாபாரம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். சந்தானம் நடித்து வெளிவந்த முந்தைய மூன்று படங்கள் தோல்வியடைந்த நிலையில் இந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்திற்கு நல்ல வியாபாரம் நடந்திருப்பது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் நகைச்சுவை கலந்து நன்றாக வந்திருப்பதால்தான் இந்த வியாபாரமாம். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.




