ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
ஜுன் மாதத்தில் பள்ளிகள் திறந்த சமயத்தில் அதிகப் படங்கள் வெளிவராது. பள்ளி, கல்லூரி சம்பந்தமான வேலைகளில் பெற்றோர்கள் மிகவும் பிஸியாக இருப்பார்கள். அதனால் தியேட்டர்களுக்கு வர மாட்டார்கள். ஆனாலும், கடந்த சில வருடங்களாக அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜுன் மாதத்திலும் படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த வாரம் ஜுன் 23ம் தேதி, “அழகிய கண்ணே, அஸ்வின்ஸ், நாயாட்டி, ரெஜினா, தண்டட்டி, பாயும் ஒளி நீ எனக்கு,” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றோடு கமல்ஹாசன் நடித்த பழைய படமான 'வேட்டையாடு விளையாடு' படமும் ரீ-ரிலீசாகிறது. இப்படம் தவிர மற்ற படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். கடந்த வாரம் வெளியான படங்களுக்கே வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்த வாரம் அவற்றிற்குத் தகுந்த அளவில் தியேட்டர்கள் கிடைத்து அவை வெளிவந்து ரசிகர்களை எப்படி கவரப் போகிறது என்பது சவால்தான்.
தயாரிப்பாளர் சங்கம் இரு தினங்களுக்கு முன்பு நடத்திய பொதுக்குழுவில் பல தீர்மானங்களை நிறைவேற்றியது. அது போல ஒவ்வொரு வாரமும் இப்படி அதிகப் படங்கள் வருவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சிறிய தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. பல படங்களுக்கு தமிழகம் முழுவதுமே 50 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.