ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

கே.எம்.எச் புரடக்ஷன் சார்பில் கார்த்திக் சவுத்ரி தயாரிக்கும் படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இதில் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஆர். கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். சாகர் இசையமைத்துள்ளார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 23ம் தேதி வெளிவருகிறது.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் விக்ரம் பிரபு பேசியதாவது: நல்ல டீமோடு நிறைய ஹார்டு ஒர்க் செய்தது ரொம்ப சந்தோசம். இயக்குநர் கார்த்திக் ரொம்பவும் சினிமாவில் ஆர்வம் உள்ளவர். அவருடன் பயணம் தொடங்கி நீண்டநாள் சென்றது. கண்ணுக்கு தெரிகிற ஒரு விஷயம் உண்மையாகவும் இருக்காது, கண்ணுக்கு தெரியாத விஷயம் தப்பாகவும் இருக்காது என்ற ஒரு அழகான விஷயத்தை வைத்துதான் இந்த படத்தின் கதை, திரைக்கதையை இயக்குனர் எழுதியிருந்தார். இதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது.
இந்த படத்தில் வாணி போஜன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கன்னட ஹீரோ தனஞ்ஜெயாவும் ஸ்கிரிப்டை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தில் ஒன்பது சண்டைக்காட்சிகள் இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த சண்டைக்காட்சி மாறுபடும். தியேட்டரில் நல்ல அனுபவம் தரும் படமாக இருக்கும். என் மனத்துக்கு நெருக்க மான படம். என்றார்.




