ராஜமவுலியின் பிலிம் செட்டை பார்வையிட விரும்பும் ஜேம்ஸ் கேமரூன் | 2025ல் அதிகம் ரசித்து பார்க்கப்பட்ட தமிழ் பாடல்கள்… | பிளாஷ்பேக்: சாண்டோ சின்னப்ப தேவர், எம் ஜி ஆர் இருவரின் நட்பிற்கு ஆணிவேராய் அமைந்த “ராஜகுமாரி” | பீரியட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் : பரூக் ஜே.பாஷா ஆசை | மகனை நடிகனாக்கிய தயாரிப்பாளர் | தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் | ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது |

சமீபகாலமாக சுயாதீன பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணையான வரவேற்பை பெற்று வருகின்றன. வீடியோ ஆல்பம் மூலம் சினிமாவில் நுழைந்து தங்களுக்கான இடத்தை அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அந்தவகையில் தற்போது லஹரி இசை நிறுவனம் சார்பில் 'நீ போதும்' என்கிற இசை ஆல்பம் உருவாகியுள்ளது. பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் நிரஞ்சனா அசோகன் நாயகியாக நடித்துள்ளார். வம்சி இந்த ஆல்பத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். சுரேந்திரன் ஜோ எழுதியுள்ள இந்த பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.
இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பேசியதாவது: இந்த பாடலை வெளியிடும் அளவுக்கு நான் சரியான ஆளா என்று தெரியாது. ஆனால் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. புதியவர்களின் வருகையை எப்போதும் ஊக்குவிக்க நான் தயங்கியதே இல்லை. அதில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம், திருப்தி கிடைக்கிறது. பல வருடங்களுக்கு முன் நானும், விக்ரமும் 'காதலிசம்' என்கிற ஆல்பத்தில் இணைந்து நடித்தோம். அந்த சூழலில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆல்பங்கள் வரவேற்பை பெற்று வந்தாலும் தமிழில் எங்கள் ஆல்பத்தை எப்படி வெளியிடுவது, மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது என்கிற வழிவகை தெரியாததால் அது ரிலீசாகமலேயே போய்விட்டது. ஆனால் இந்த தலைமுறையில் ஆல்பம் பாடல் குறித்து எல்லோர்க்குமே தெரிந்துள்ளது. என்னால் செய்ய முடியாததை இன்னொருத்தர் செய்யும்போது மகிழ்சியாக இருக்கிறது. என்றார்.




