பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியான படம் அய்யப்பனும் கோஷியும். அந்தப்படத்தில் ஹீரோக்களை சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தாலும் பிஜு மேனனின் மனைவியாக ஆதிவாசி இனத்தை சேர்ந்த துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்திருந்தார் நடிகை கவுரி நந்தா. அந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. இவர் தற்போது சொர்க்கத்திலே கட்டெறும்பு என்ற படத்திலே நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பியும், நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் டிராமா படத்தின் இயக்குனருமான தயன் ஸ்ரீனிவாசன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஜீப் ஒன்றில் கவுரி நந்தா பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஜீப்பை ஓட்டிய நடிகரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் இருந்த மின்சார கம்பத்தின் மீது மோதியது. நல்ல வேலையாக அதில் பயணித்த கவுரி நந்தா உட்பட நால்வரும் உடனடியாக வண்டியை விட்டு இறங்கி விட்டனர். ஜீப் மெதுவான வேகத்தில் சென்றதால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தன்னிடம் விசாரித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார் கவுரி நந்தா.