இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் |
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அந்தாலஜி தொடர் 'மார்டன் லவ் சென்னை', இதில் ராஜு முருகன் இயக்கிய 'லால்குண்டா பொம்மைகள்' என்ற கதையில் ஷோபா என்ற கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கவுரி பிரியா. இவர் சினிமாவுக்கு புதிதில்லை. மிஸ்.ஹதராபாத்தாக தேர்வு பெற்ற இவர் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ரைட்டர் பத்மபூசன்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார். இப்போது இந்த அந்தாலஜி படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
“தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. லால்குண்டா பொம்மையில் அக்மார்க் சென்னை பெண்ணாக நடித்திருக்கிறேன். நடிப்புக்கு கிடைத்து வரும் பாராட்டுகள் பெரிய நம்பிக்கை தருகிறது. தற்போது இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அது பற்றிய அறிவிப்பை தயாரிப்பு தரப்பே வெளியிடுவார்கள். மேலும் கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் கவுரி பிரியா.