Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூன் மாதத்தோடு விஜய்யின் லியோ படப்பிடிப்பு முடிவடைகிறது!

21 மே, 2023 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Vijay's-Leo-shoot-ends-with-June!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் அர்ஜுன், மன்சூர் அலிகான், திரிஷா உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இதையடுத்து லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அங்கு பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும் அங்கு லியோ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தோடு முடிவடைய உள்ளது. ஏற்கனவே இப்படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாதங்களில் இறுதிக்கட்ட பணிகளை மின்னல் வேகத்தில் நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தங்கலான் படப்பிடிப்பில் விக்ரமுக்கு காயம்!  மாளவிகா மோகனன் தகவல்!!தங்கலான் படப்பிடிப்பில் ... சுனைனாவை காணவில்லை - பப்ளிசிட்டிக்காக வீடியோ வெளியிட்ட படக்குழு! சுனைனாவை காணவில்லை - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)