வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை வென்ற 1983ம் ஆண்டு அணி கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். அந்தக் காலத்தில் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர். அவரைப் போல ஒரு ஆல்ரவுண்டர் இந்திய கிரிக்கெட் அணியில் அதற்கு முன்பு இருந்ததில்லை. பல சாதனைகளைப் படைத்தவர். அவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசிய புகைப்படத்தைப் பகிர்ந்து, “சிறந்த மனிதருடன் இருப்பது பெருமையும், சிறப்பும் ஆகும்,” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கூட ரஜினிகாந்தை கிரிக்கெட் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சந்தித்துப் பேசி புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். ரஜினிகாந்த், கபில்தேவ் சந்திப்பு பற்றி சினிமா ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.