காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே விஜய்யின் 68வது படம் பற்றி ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மல்லினேனி அப்படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
பல வெற்றிப் படங்களைத் தந்த, பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய சூப்பர் குட் நிறுவனத்தின் 100வது தயாரிப்பாக அப்படம் உருவாக உள்ளது. அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி தெலுங்கிலும் சில படங்களைத் தயாரித்துள்ளார். அவரது 100வது படத்தில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் இணையப் போவதாகத் தெரிகிறது.
'வாரிசு' படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார். அப்படம் 300 கோடி வசூல் என்று சொல்லப்பட்டாலும் ஒரு குடும்பப் படமாக மட்டுமே இருந்தது. விஜய் ரசிகர்களை பெரிதாக திருப்திப்படுத்தவில்லை. சீரியல் போல இருந்தது என்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்தது.
விஜய்யின் 68வது படத்தையும் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்கப் போகிறார் என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் உள்ளது. தெலுங்கில் அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கியவர் மல்லினேனி. கடைசியாக பாலகிருஷ்ணா நடித்த 'வீர சிம்ஹாரெட்டி' படத்தை இயக்கியிருந்தார். அதற்கு முன்பாக “கிராக், வின்னர், பண்டகா சேஸ்கோ, பலுப்பு, பாடிகார்டு, டான் சீனு” ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். ஆக்ஷன் படங்களை எடுப்பதில் அசத்துபவர் கோபிசந்த்.
அதனால், விஜய்யை வைத்து இயக்கும் போது பாலகிருஷ்ணா படத்தை விடவும் ஆக்ஷன் வைப்பார் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் நிரந்தரமில்லை.