மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் நசக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'யாத்திசை'. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய கதை கருவை மையமாக கொண்டு உருவானது. குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படமாக என பலரும் பாராட்டினர். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'யாத்திசை' படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியது. இதையடுத்து இந்த படம் வருகின்ற 12-ந்தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.