அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ஹாலிவுட் நடிகர்கள் நீண்ட வருடங்கள் வாழ்வதும், வயது முதிர்ந்த பிறகு திருமணம் செய்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் சர்வ சாதாரணமான ஒன்று. ஆனாலும் பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ 79 வயதில் குழந்தை பெற்றுள்ளார்.
காட்பாதர், ரேஜிங் புல், டாக்சி டிரைவர், குட்பெல்லாஸ், ஐரிஷ் மேன் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ராபர்ட் டி நீரோ. 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நீரோ 3 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார், 5 முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
தற்போது அவர் 'கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்', 'அபவுட் மை பாதர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் அவர் சமீபத்தில் தனக்கு 7வது குழந்தை பிறந்திருப்பதாக கூறி அதிர வைத்துள்ளார். ஆனால் குழந்தையின் பெயர், குழந்தையின் தாய் யார் என்ற விபரத்தை தெரிவிக்கவில்லை.
நீரோ 1976 இல் நடிகை டியான்னே அபோட்டை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். மனைவி டியான்னே அபோட்டிற்கு முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகளை தத்தெடுத்துக் கொண்டார். டியான்னேவை விவாகரத்து செய்து விட்டு அதன்பிறகு 1996ல் மாடல் அழகி டூக்கி ஸ்மித்துடன் உறவில் இருந்தார். இந்த தம்பதியருக்கு சோதனை குழாய் மூலம் பிறந்த இரட்டை மகன்கள் உள்ளனர். பின்னர் டூக்கியையும் பிரிந்து, 1997ல் நடிகை கிரேஸ் ஹைடவரை மணந்தார். கிரேஸ் ஹெடவருக்சுகு ஒரு மகன் பிறந்தார், வாடகை தாய் மூலம் ஒரு மகள் பிறந்தார். 20 வருட வாழ்க்கைக்கு பிறகு டி நீரோ மற்றும் ஹைடவர் பிரிந்தனர். இந்த நிலையில்தான் டி நீரோ தனது 7 வது குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.