தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் |
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் விதமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு குணசித்திர கதாபாத்திரத்தில் சற்றே நீட்டிக்கப்பட்ட ஒரு கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மும்பையில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பை கிளம்பி சென்றார் ரஜினிகாந்த்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் மொய்தீன் கான் என்கிற கதாபாத்திர போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த போஸ்டரில் எந்த இடத்திலுமே ரஜினிகாந்த் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதுமட்டுமல்ல படத்தின் டைட்டிலுக்கு மேலாக விஷ்ணு விஷால், விக்ராந்த் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தான் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் இவர்கள் தான் ஹீரோ என்பதாலும் தன் பெயரை முன்னிலையில் படுத்த வேண்டாம் என ரஜினிகாந்த் பெருந்தன்மையாக கூறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அநேகமாக ரஜினிகாந்த் பெயர் இல்லாமல் அவர் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டர் வெளியாவது இத்தனை வருடங்களில் இதுதான் முதல் முறையாக இருக்கும்.