Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு: பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை வைத்த ஸ்ரேயா

07 மே, 2023 - 11:13 IST
எழுத்தின் அளவு:
A-chance-to-perform-for-a-song:-Shreya-makes-a-request-to-the-press

யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள படம் "மியூசிக் ஸ்கூல்". இப்படம் வருகிற 12ம் தேதின்று வெளிவருகிறது. இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக விழாவில் ஸ்ரேயா பேசியதாவது:

சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டுவந்துள்ளார். இளையராஜாவின் இசை எல்லோரையும் மயக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது இசை வேறொரு உலகத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும். ஷர்மன் ஜோஷி நடிப்பை மும்பையில் வேறொரு ஷுட்டிங்கில் பார்த்துள்ளேன். அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். இப்படத்தில் அனைவரும் மிகக்கடுமையாக உழைத்துள்ளார்கள்.
தமிழில் தற்போது நடிக்காததற்கு காரணம் வாய்ப்புகள் வரவில்லை என்பதுதான். வாய்ப்பு வந்தால் எப்போதும் நடிப்பேன். ஒரு பாடலுக்கு ஆடுவீர்களா என்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் ஆடுவேன். நான் ஆடுவதை ரசிப்பதால்தானே இந்த கேள்வி எழுகிறது. நீங்களே (பத்திரிகையாளர்கள்) தயாரிப்பாளர்களிடம் பேசி வாய்ப்பு வாங்கி கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யை தொடர்ந்து காஷ்மீர் செல்லும் சிவகார்த்திகேயன்விஜய்யை தொடர்ந்து காஷ்மீர் செல்லும் ... படப்பிடிப்பில் இறந்த லைட்மேன் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி: தயாரிப்பாளர் வழங்கினார் படப்பிடிப்பில் இறந்த லைட்மேன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)