விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை சம்யுக்தா மேனன். தமிழில் களரி, ஜூலை காற்றில், எரிடா படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிந்த ‛வாத்தி' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். அவர் தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற விரூப்பாக்ஷா படம் தமிழ், மலையாளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மலையாள புரமோசனில் கலந்து கொண்ட சம்யுக்தா தான் சாதி பெயரில் அழைக்கப்படுவதை வெறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: என்னுடைய சாதிப் பெயரை நான் நீக்கியது குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ கூறியிருந்தது என்னை காயப்படுத்தியது. நான் எடுத்த முடிவு மிகவும் முற்போக்கானது. இப்போதும் சாதிப் பெயரை சேர்த்து என்னை அழைக்கும்போது வெறுப்பாக உணர்கிறேன். இன்றும் நான் மற்ற இடங்களுக்குச் செல்லும்போது இந்தப் பெயராலேயே அழைக்கப்படுகிறேன். நான் படத்தின் புரமோஷனுக்காக சென்னை சென்றபோதும் சாதிப் பெயரைச் சொல்லியே அழைத்தார்கள்.
அநேகமாக என்னுடைய இந்த முடிவு பலருக்கு புதுமையான விஷயமாக இருக்கும். ஆனால், சமூகத்தில் பலரும் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளனர். அதனால்தான் எனது குடும்பப் பெயரை நீக்க முடிவு செய்தேன். எனவே, அந்த முடிவு குறித்து என்னிடம் கேள்வி எழுப்பும்போது வேதனையாக இருக்கிறது. குறிப்பாக, ஷைன் டாம் சாக்கோ எனது முடிவு குறித்து அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒன்றுடன் சேர்த்து பேசியிருப்பது வருத்ததை அளிக்கிறது” என்றார்.
சம்யுக்தா வாத்தி படத்தின் புரமோசனில் கலந்து கொண்ட போது தன்னை மேனன் என்ற சாதி பெயர் சொல்லி அழைப்பதை விரும்பவில்லை. சாதி அடையாளத்தை வெறுக்கிறேன் என்று கூறினார். சமீபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ “நீங்கள் ஒரு மேனனாகவோ, நாயராகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது முஸ்லிமாகவோ யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் உங்கள் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். என்று சம்யுக்தாவை விமர்சித்திருந்தார். அதை குறிப்பிட்டே சம்யுக்தா இவ்வாறு பேசி உள்ளார்.