இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் |
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடத்து வருகிறது. விக்ரமிற்கு அடிபட்டுள்ளதால் அவர் இல்லாத மற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார் ரஞ்சித். இந்நிலையில் அடுத்த வருடம் இப்படத்தை திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் தங்கலான் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, இந்த படத்தை ஆஸ்கார் , கேன்ஸ் போன்ற 8 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.