ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதில், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த சர்ச்சையானது இப்போது வரை சோஷியல் மீடியாவில் புகைந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஜோ மைக்கேல் என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வெற்றியில் முறைகேடு இருப்பதாக ஆர்.டி.ஐ பதிவு செய்திருந்தார். அதில், விஜய் டிவி, பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு எதிராக பல கேள்விகளை அடுக்கியிருந்தார். அதற்கு இன்று வரை சரியான பதில் கிடைக்காத நிலையில், ஜோ மைக்கேல் அளித்த ஆர்டிஐ மனுவை திரும்ப பெற கூறி அசீமின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.