ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்காகத் தன்னையே வருத்திக் கொள்ளும் நடிகர் விக்ரம். அவருக்குப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த 'சேது' படத்திலிருந்து, அடுத்து அவர் நடிப்பில் வந்த முக்கியப் படங்களான 'பிதாமகன், ஐ' ஆகிய படங்களிலும் தன்னுடைய தோற்றத்தை கடுமையாக மாற்றியிருப்பார்.
இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்திற்காக தலைமுடி, தாடி வளர்த்து தன்னுடைய தோற்றத்தை ஒல்லியாக்கி வேறு ஒரு தோற்றத்தில் இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விலா எலும்பில் காயமேற்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில நாட்கள் ஆகும் என்று சொல்லப்பட்டாலும் குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது ஓய்வில் இருப்பார் என்று சொல்கிறார்கள்.
'தங்கலான்' படத்தின் கதை அந்தக் காலக் கதையாக உருவாகி வருகிறது. கேஜிஎப் உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நடிக்கும் போது தினமும் விக்ரமிற்கு ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு நடித்து வருகிறாராம். ரத்தம் சிந்தி உழைப்பார்கள் என்று சொல்வார்கள், ஆனால், 'தங்கலான்' படப்பிடிப்பில் குழுவினரும், விக்ரமும் உண்மையிலேயே அப்படித்தான் உழைத்து வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படமாக 'தங்கலான்' படம் இருக்கும் என்பது கோலிவுட்டின் லேட்டஸ்ட் தகவல்.