இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் 62வது படமான 'விடாமுயற்சி' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. 'வி' என்ற எழுத்தில் ஆரம்பமாகும் மற்றுமொரு அஜித்தின் படமாக இப்படம் அமைந்துள்ளது.
இதுவரையில் அஜித் நடித்து வெளிவந்த படங்களில், “வான்மதி, வாலி, வில்லன், வரலாறு, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை” என ஒன்பது படங்கள் வெளிவந்துள்ளன. 'விடாமுயற்சி' அந்த 'வி' வரிசையில் வர உள்ள பத்தாவது படம்.
மேலே உள்ள 'வி' படங்களில் 'வரலாறு' தாமதமாக வெளிவந்து சுமாரான வெற்றியைப் பெற்றது. 'விவேகம்' படம் தோல்வியைத் தழுவியது. மற்ற படங்கள் அஜித்தின் வெற்றிப்பட வரிசையில் முக்கியமான படங்கள். 'விடாமுயற்சி' எப்படிப்பட்ட படமாக அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
படம் வெற்றி பெற்றால், 'விடாமுயற்சி - விஸ்வரூப வெற்றி” என அப்போது விமர்சனங்களுக்கு 'கேப்ஷன்' போட்டுக் கொள்வார்கள்.