23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
நடிகை ஸ்ரேயா தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் உள்ளே நுழைந்தார். தற்போது வரை படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இடையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டாலும் கூட. கதாநாயகியாக நடிப்பதுடன், சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடவும் செய்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவர் அவரிடம் இந்த வயதிலும் எப்படி உடலை இப்படி கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.
ஆனால் ஸ்ரேயாவோ, ஏன் நடிகைகளிடம் மட்டும் இப்படி கேட்கிறீர்கள் ?. எந்த ஒரு தெலுங்கு ஹீரோவிடமாவது இப்படி கேட்டிருக்கிறீர்களா என்று கோபமாக பதில் கேள்வி கேட்டார். அந்த நிருபரோ இதை உங்களுக்கான பாராட்டாக எடுத்துக் கொள்ளலாமே என்று சாந்தமாக கூறியுள்ளார். ஆனாலும், “இதுவா பாராட்டு? என்னுடைய நண்பர்கள் சிலர் கூட பெண்களை பார்க்கும்போது வாவ் இரண்டு குழந்தைகள் பெற்றபின்னும் கூட இப்படி அழகாக இருக்கிறாயே என்பது போன்று பேசுகிறார்கள்.. இவையெல்லாம் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக பாராட்டு அல்ல” என்று மீண்டும் தனது கருத்திலேயே பிடிவாதம் காட்டினார்.
தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, தனக்கான ஒரு பாராட்டு என்பதை புரிந்து கொள்ளாதது ஒரு பக்கம் இருக்க, அந்த கேள்விக்கான பதிலாக இன்னொரு கேள்வியை ஸ்ரேயா கேட்டது அந்த நிகழ்வில் கொஞ்ச நேரம் சலசலப்பையும் ஏற்படுத்தியது.