படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
தரமணி, ராக்கி படங்களில் நடித்த வசந்த் ரவி நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் 'அஸ்வின்ஸ்'. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பிரசாத் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் தருண் தேஜா இயக்கி உள்ளார். உளவியல், ஹாரர் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது. இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்களின் கூட்டத்தை சுற்றி கதை நடக்கிறது.
விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைக்கிறார். இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளம் கணிசமான விலை கொடுத்து வாங்கி இருக்கிறது.
வசந்த்ரவி அளித்த பேட்டி, ''தரமணி படத்திற்கு பின் நிறைய வாய்ப்பு வந்தது. தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என குறிப்பிட்ட கதையை மட்டுமே தேர்வு செய்கிறேன். தற்போது 'ஜெயிலர், அஸ்வின்ஸ், வெப்பன்' படங்கள் அடுத்தடுத்து வெளியாகும். இதுதவிர இரண்டு படங்களும் நடித்து வருகிறேன். 'ராக்கி' படத்திற்கு பின் தான் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு 'ஜெயிலர்' படத்தில் கிடைத்தது. நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் நிறைய விஷயங்கள் கற்றேன் அனுபவமும் வளர்ந்தது'' எனக்கூறியுள்ளார்.