ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்போது இந்தியில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக கிஸி கி பாய் கிஸி கி ஜான் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியது; "எனக்கு தயாரிப்பாளர் ஒருவர் ரூ.2 கோடிக்கு கார் பரிசாக கொடுத்ததாகவும், அந்த காரிலேயே நான் படப்பிடிப்புகளுக்கு செல்கிறேன் என தகவல் பரவியது. என்னை பற்றி தொடர்ந்து தவறான வதந்திகள் பரவி வருகிறது. நான் தயாரிப்பாளரிடம் இருந்து காரை பரிசாக பெற்றேன் என்பதும் வதந்திதான். இதுகுறித்து கூட என் பெற்றோர் என்னிடம் காரை பரிசாக வாங்கியது உண்மையா என கேட்டனர். என்னைப்பற்றி தொடர்ந்து வரும் வதந்திகளுக்கு என்னால் விளக்கம் அளித்துக் கொண்டே இருக்க முடியாது'' என கூறியுள்ளார்.