சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
'பாய்ஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். அதன்பின் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலிப்பதாக கடந்த சில வருடங்களாகவே கிசுகிசு போய்க் கொண்டிருக்கிறது. இருவரும் ஒன்றாகப் பல இடங்களுக்கு சுற்றி வருகிறார்கள். ஆனால், தாங்கள் காதலிப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. இருந்தாலும் ஊடகங்களில் அவர்களைக் காதலர்கள் என்றே எழுதி வருகிறார்கள்.
நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார் சித்தார்த். அவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “எப்போதும் மகிழ்ச்சியாய் இரு... திரைப்படங்கள், காதல், இசை, எப்போதும் வலிமையான தூய்மையான இதயம், மேஜிக், நிறைய சிரிப்பு, நீ நீயாக இரு, மந்திரமாய் இரு… மகிழ்ச்சியான சித்து நாள்,” என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.