சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா 5 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்ட மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட எண்ணி உள்ளனர்.
இந்த படத்தின் டைட்டில் வீடியோ இன்று (ஏப்ரல் 16) காலை வெளியானது. அதில் படக்குழுவிற்கு ‛கங்குவா' என டைட்டில் வைத்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தின் இயக்குனர் வீடியோவை வெளியிட்டு தெரிவிக்கையில், ‛சூர்யா 42 படத்தின் தலைப்பை ‛கங்குவா' என அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். திரையில் நெருப்பின் வீரமும் வலிமையும் கொண்ட ஒரு கதாநாயகனாக நடிகர் சூர்யா இருப்பார். கம்பீரமான, தனித்துவமான அதே சமயம் சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு கதையாக இது பார்வையாளர்களுக்கு அமையும். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் பட வெளியீட்டுத் தேதியையும் அறிவிப்போம்” என்றார்.