மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
'பசங்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் விமல். அதன் பிறகு 'களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப் பை,' என சில படங்களில் பாராட்டப்பட்டார். கடந்த சில வருடங்களாக அவர் நடித்து வெளிவரும் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை, வரவேற்பையும் பெறவில்லை.
இருப்பினும் தற்போதும் ஐந்தாறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விமல் நடித்துள்ள இரண்டு படங்கள் ஏப்ரல் 21ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 'தெய்வ மச்சான், குலசாமி' ஆகிய இரண்டு படங்கள்தான் அவை.
சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'குலசாமி' படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியிருக்கிறார். இப்படத்தில் தன்யா ஹோப் கதாநாயகியாக நடித்துள்ளார்.
'தெய்வ மச்சான்' படத்தை மார்ட்டின் நில்மர்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நேகா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.