பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் நாகார்ஜூனா. இவர் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன்கள் நாகசைதன்யா, அகில் இருவரும் தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இவரது மனைவி அமலாவும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
நாகார்ஜூனா இப்போது இயக்குனர் பிரசன்ன குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் 63 வயதை கடந்த நாகார்ஜூனாவிற்கு ஜோடியாக இந்த படத்தில் 26 வயது இளம் கதாநாயகியான மானசா நடிக்கிறார். அவரை விட 37 வயது குறைந்த நடிகையுடன் நாகார்ஜூனா ஜோடி சேர்வதை சமூக வலைத்தளதில் நெட்டிசன்கள் விமர்சித்தும், கேலியும் செய்து பதிவுகள் பகிர்ந்து வருகிறார்கள்.