3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் |
நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் மதன்பாப். தனது தனித்துவமான சிரிப்பைக் கொண்டே பல படங்களில் நடித்தார். தமிழில் 600 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள மதன்பாப், சொந்த காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலகுவததாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்.
தற்போது அவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பிரபுதேவாவின் 'பஹிரா' காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த 'கோஷ்டி' படத்திலும் நடித்து இருந்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் மற்றும் சந்தானத்துடன் 'கிக்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
“சில காலம் எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. சினிமாவை தாண்டிய சில பிரச்னைகளை சரிசெய்ய வேண்டியது இருந்தது. இப்போது எல்லாவற்றையும் சரி செய்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டேன். எனது பழைய பாணியில் இருந்து விலகி சற்று மாறுலாக பயணிக்க விரும்புகிறேன். பழைய பாணியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் விரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறேன்” என்கிறார் மதன்பாப்.