இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான செந்திலுக்கு 72வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் கோயிலில் பீமரத சாந்தி நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஸ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூரணாபிஷேகம் ஆகிய சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் திரைப்பட காமெடி நடிகர் செந்தில் தனக்கு 72வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு நேற்று இரவு கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இன்று கோவிலுக்கு வந்த நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு சிவாச்சாரியார்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோவில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
பின்னர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி மாலை மாலை மாற்றிக் கொண்டதுடன் சுவாமி அம்பாள் மற்றும் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் செந்திலின் மகன்கள் மணிகண்டபிரபு, மிரிதிபிரபு மற்றும்' குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பூஜைகளை அமிர்தகடேஸ்வரர் குருக்கள் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர்.