சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
குனீத் மோங்கா தயாரிப்பில், கார்டிகி கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற டாகுமெண்டரி குறும்படம் 95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்தப் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 1969ம் வருடம் இதே பிரிவில் 'த அவுஸ் தட் ஆனந்தா பில்ட்' என்ற குறும்படமும், 1979ம் ஆண்டு 'அன் என்கௌன்டர் வித் பேசஸ்' என்ற படங்களும் ஆஸ்கர் விருதுக்காகப் போட்டியிட்டன. ஆனால், அவை விருதுகளை வெல்லவில்லை.
முதுமலை தேசியப் பூங்காவில் யானைகளை வளர்க்கும் பொம்மன், பெல்லி என்ற தம்பதிகளைப் பற்றிய கதையாக இந்த 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது கதையுடன் அந்த தேசியப் பூங்காவில் ஆதரவற்று வந்த ரகு என்ற யானையை அவர்கள் வளர்ப்பது பற்றியும், பின் அது அவர்களை விட்டு செல்வது பற்றியும் ஒரு உணர்வுபூர்வமான படமாக அது அமைந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2022ம் ஆண்டு இந்த குறும்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது.