எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன். இசைக்கலைஞராக மட்டுமில்லாமல் பாடகராகவும் உள்ளார். 'ஓ காதல் கண்மனி', 'தில் பேச்சாரா' உள்ளிட்ட படங்களில் அவர் பாடி இருக்கார். அத்துடன் ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அப்பா ரஹ்மானுடன் நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
இந்நிலையில் ஓர் அதிர்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாவில் ஏ.ஆர்.அமீன் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஒரு பாடலுக்காக நடத்தப்பட்ட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
அதாவது, இரண்டு தினங்களுக்கு முன்பு பாடல் படப்பிடிப்பு நடந்த போது அமீன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கேமரா முன் பாடுவதில் ஆர்வமாக இருந்தனர். அப்போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரஸ் மற்றும் சரவிளக்குகள் திடீரென்று சரிந்து கீழே விழுந்தன. அப்போது அமீன் மற்றும் குழுவினர் சற்று தள்ளி நின்றதால் விபத்தில் சிக்காமல் தப்பினர்.
இந்த சம்பவத்தை குறித்து பதிவிட்டுள்ள ஏ.ஆர்.அமீன்," இன்று பாதுகாப்பாகவும், உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஆன்மிக குருமார்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.