அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வாத்தி . தெலுங்கில் இப்படம் சார் என்ற பெயரில் வெளியானது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இத்திரைப்படம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .
இப்படம் உலக அளவில் ரூ 100 கோடி வசூலை எட்டி உள்ளது. இப்படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திராவில் கம்மம் என்ற பகுதியில் இப்படத்தை இலவசமாக திரையிட வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதை பார்த்த இப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி, ‛வாத்தி/சார் இத்திரைப்படம் படிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்வதே. அதனால் மாணவர்களுக்கு இப்படம் இலவசம். இந்த திரைப்படத்தை மாணவர்கள் இலவசமாக காண தயாரிப்பு நிறுவனத்தை அணுகுமாறு கூறியுள்ளார்.