‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
அருண் விஜய் நாயகனாக நடித்த யானை படத்தை அடுத்து விஷாலை வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறார் ஹரி. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை படங்களில் நடித்த விஷால் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைகிறார். இதற்கு முன்பு விக்ரம் நடித்த சாமி, சாமி 2 மற்றும் சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் படங்களின் மூன்று பாகங்களையும் போலீஸ் கதையில் இயக்கிய ஹரி, தற்போது விஷாலை வைத்து இயக்கும் புதிய படத்தையும் போலீஸ் கதையிலேயே இயக்கப் போகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.