இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் லப்பர் பந்து என்கிற படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மலையாள நடிகை சுவாசிகா விஜய் நடிக்கிறார். மலையாள திரையுலகில் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சுவாசிகா தமிழுக்கு ஒன்றும் புதியவர் அல்ல. சொல்லப்போனால் இவர் சினிமாவில் அறிமுகமானதே வைகை என்கிற தமிழ்ப்படத்தில் தான்.
கடந்த 2009ல் வெளியான அந்த படத்தில் விசாகா என்கிற பெயரில் தான் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சாட்டை படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருந்த இவர் அதன்பிறகு பெரும்பாலும் தமிழில் அடையாளம் தெரியாமல் வந்துபோன சில படங்களில் தான் நடித்துள்ளார். அதேசமயம் மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாகவும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். கடந்த வருடத்தில் மட்டும் ஒன்பது படங்களில் நடித்துள்ளார். அவற்றில் மோகன்லால், மம்முட்டி, திலீப் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களும் உண்டு.
குறிப்பாக கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான ஆராட்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை விட அந்த படத்தில் சுவாசிகாவுக்கு தான் அதிக முக்கியத்துவமும் காட்சிகளும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ஒரு பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் ஓரளவுக்கு பிரபலமான ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெற்றுள்ளார் சுவாசிகா.