ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தற்போது குணச்சித்திரனார் நடிகராக வலம் வரும் மாரிமுத்து. அந்தப்படம் பெரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து புலிவால் என்கிற படத்தை இயக்கிய மாரிமுத்து இன்னொரு பக்கம் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதை தொடர்ந்து தற்போது பிஸியான குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். தற்போது. தொலைக்காட்சி சீரியல் ஒன்றிலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் பல வில்லன்களில் இவரும் ஒருவராக நடித்துள்ளார். படத்தில் சமுத்திரக்கனியும் இவரும் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். ஆனால் சமுத்திரகனியை விட மாரிமுத்து சற்று வயதானவராக தெரிவதால் அவரை அண்ணனாகவும் சமுத்திரக்கனியை தம்பியாகவும் மாற்றிய ஷங்கர், அதேபோல நல்லவனாக இருந்த அண்ணன் கதாபாத்திரத்தையும் வில்லனாக மாற்றி தம்பியை நல்லவனாக மாற்றி விட்டாராம். இந்த தகவலை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் மாரிமுத்துவே கூறியுள்ளார்.