ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
'திறந்திடு சீசே'' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. எஸ். எஸ். பி பிலிம்ஸ் சார்பில் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சாத்விக் வர்மா மற்றும் 'வலிமை' ஜாக் ராபின்சன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். மேலும் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். டீனேஜ் டிராமா ஜானரில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிறது. பெற்றோர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் இடையே காதலிப்பது தொடர்பான கருத்து மோதல்தான் படத்தின் கதை.