சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், ராஜ் சேகர் வர்மா தயாரிப்பில், ரெஜினா கசாண்ட்ரா நடித்த 'சூர்ப்பனகை' படத்தை எஸ்பி சினிமாஸ் வாங்கியுள்ளது. பேண்டசி - த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட 'சூர்ப்பனகை' 1920கள் மற்றும் தற்போதைய காலம் என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாகும். இதில் ரெஜினாவுடன் அக்ஷரா கவுடா, ஜேபி, மன்சூர் அலி கான், ஜீவா ரவி, மைக்கேல், கௌஷிக், யோகி, ரவிராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சாம் சிஎஸ் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது. இதில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கிறார் அவர் ஒரு ஆராய்ச்சிக்காக செல்லும்போது சிக்கல் ஒன்றில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.