தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் இணைந்திருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார் திரிஷா. இவர்களுடன் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் மன்சூரலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட இன்னும் பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கேஜிஎப் -2 படத்தில் வில்லனாக நடித்த ஹிந்தி நடிகர் சஞ்சய்தத் வில்லனாக நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காஷ்மீரில் நடைபெறும் லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கும் சஞ்சய் தத் தற்போது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு லியோ படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறார். அது குறித்து புகைப்படம் ஒன்று வைரலானது. இந்த படத்தில் விஜய்யும், சஞ்சய்தத்தும் நேரடியாக மோதிக் கொள்ளும் ஒரு சண்டைக்காட்சி விரைவில் காஷ்மீரில் படமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.




