லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
அஜித், திரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லன் வேடத்தில் நடித்தவர் அருண் விஜய். அதற்கு முன்பு அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த நிலையில் வில்லனாக நடித்த இந்த படம் அருண் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு அவரது ஹீரோ மார்க்கெட் சூடு பிடித்தது. அதோடு, மகிழ்திருமேனி இயக்கிய தடம், தடையறத் தாக்க போன்ற படங்களிலும் அருண் விஜய் தான் நாயகனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஜித்தின் 62 ஆவது படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அருண் விஜய்யிடம் மகிழ்திருமேனி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், யானை, சினம் படங்களைத் தொடர்ந்து தற்போது அறிவழகன் இயக்கத்தில் பார்டர் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய்.