கமல் நடிக்கும் இந்தியன்-2, ராம்சரண் நடிக்கும் 17வது படம் என இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த நிலையில் இந்த படங்களுக்கு பிறகு இன்னும் பிரமாண்டமான பட்ஜெட்டில் ஷங்கர் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இது ஒரு அண்டர் வாட்டர் கலந்த விஞ்ஞான கதையாக உருவாக உள்ளதாம். இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.900 கோடி என்கிறார்கள்.
இதில் நடிகர் விஜய்யையும், ஹிந்தி நடிகர் ஷாரூக்கானையும் நடிக்க வைக்க முற்கட்ட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார் விஜய். அதேப்போன்று அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஷாரூக்கான். இந்தப் படங்களில் அவர்கள் நடித்து முடித்ததும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
ஒருவேளை இது நடக்கும்பட்சத்தில் இரண்டு பெரிய ஸ்டார் நடிகர்கள் நடிப்பதால் படமும் பிரமாண்டமாய் உருவாவதோடு, வசூலும் மிகப்பெரிய அளவில் வரும் என்கிறார்கள்.