கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6வது சீசனில் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அடுத்த இடத்தில் இருந்த அசீம் டைட்டில் வென்றார். இந்த முடிவை கமலே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அசீமின் வெற்றியும், விக்ரமனின் தோல்வியும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியின் குளறுபடி, தவறான தேர்வு குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கமலை பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் சந்தித்தார். இருவரும் 30 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு படங்களை வெளியிட்டுள்ள விக்ரமன் “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று குறிப்பிட்டிருந்தார். என்றாலும் விக்ரமனை ஆறுதல்படுத்த கமலே அவரை அழைத்தாகவும், கமலின் அடுத்த படத்தில் விக்ரமனுக்கு கமல் வாய்ப்பளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.