2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த நிலைகளில் அடுத்தபடியாக ரஜினியிடம் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், ‛ஜெய்பீம்' ஞானவேல் உள்ளிட்ட பலர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதையை ரஜினி தேர்வு செய்துவிட்டாராம். அதாவது ‛ஜெய் பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும், அடுத்தபடியாக அவர் இயக்கத்தில் ரஜினி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.