500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம் உலக அளவில் பிரபலடைந்துள்ளது.
ஜப்பானில் வெளியான இந்தப் படம் தற்போது 100 நாட்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. 42 நேரடி சென்டர்கள் மற்றும் 114 ஷிப்ட் சென்டர்களில் தற்போது இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறதாம். ஒரு இந்தியத் திரைப்படம் ஜப்பான் நாட்டில் புரிந்துள்ள புதிய சாதனை இது.
ஜப்பான் மொழியில் 100 நாட்கள் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதைத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.
“அந்தக் காலத்தில் 100 நாட்கள், 175 நாட்கள் ஒரு படம் ஓடுவது பெரிய விஷயம். காலப் போக்கில் வியாபார அமைப்பு மாறிவிட்டது. கடந்து போன அவை ஒரு அழகான ஞாபகங்கள். ஆனால், ஜப்பான் ரசிகர்கள் அந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளார்கள். லவ் யு ஜப்பான், அரிகடோ கொசாய்மாசு” என ஜப்பான் மொழியிலும், நன்றி தெரிவித்துள்ளார் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலி.