ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சினிமாவில் உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். வருகிற மார்ச் மாதம் 12ம் தேதி, 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. ஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம் பெற்றுள்ளது. அதேபோல ஆவணப்பட பிரிவில்' தி எலிபென்ட் விஸ்பர்ஸ்' மற்றும் 'ஆல் தட் ப்ரீத்ஸ்' இறுதிப் பரிந்துரைக்கு தேர்வாகியுள்ளது. இந்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்ட 'செல்லோ ஷோ' இறுதிப்பட்டியலில் தேர்வாகவில்லை.
சிறந்த படங்கள் பிரிவில் தி கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட், அவதார் : தி வே ஆப் வாட்டர், கதி பென்ஷெசஸ் ஆப் லின்ஷெரின், எல்விஸ்க், எவரித்திங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ், தி பெப்லமென்ஸ், தார், டாப்கன்: மேவ்ரிக்ஸ், ட்ரையாங்கிள் ஆப் சான்டெஸ், வுமன் டாக்கிங் படங்கள் இடம் பெற்றுள்ளது.
சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் 'தி பான்சஸ் ஆப் லின்ஷெரின்' படத்தை இயக்கிய மார்ட்டின் மெக்டொனாங்கும், 'எவரித்திங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படத்தை இயக்கிய டேனியல் க்வான் மற்றும் டேனியர் சச்சினெர்ட்டும், 'தி பெப்லமென்ஸ்' படத்தை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும், 'தார்' படத்தை இயக்கிய டோட் பீல்டும், ட்ரையாங்கிள் ஆப் சான்டெஸ்' படத்தை இயக்கிய ரூபன் ஆஸ்லன்டும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு அவதார் : தி வே ஆப் வாட்டர், மற்றும் டாப்கன் : மேவ்ரிக்ஸ் என்ற இரண்டு பிரமாண்ட படங்கள் மோதுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டுமே இரண்டாம் பாக படங்கள். அவதார் தி இரண்டாம் பாகம் கற்பனை உலகத்தில் ஆதிக்க சக்திக்கும், மக்கள் சக்திக்குமான போரை சொல்கிறது, டாப் கன் : மேவ்ரிக்ஸ் உலக வான்வெளியில் நடக்கும் யுத்தத்தை சொல்கிறது.
இந்தாண்டு எவரித்திங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படம் அதிகப்பட்சமாக 11 விருதுகளுக்கு போட்டியிட்டுள்ளது. ஆஸ்கர் விருது விழாவிற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.