23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படமான 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம் கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி வெளியானது. தொடர்ந்து வசூலைக் குவித்து வந்த படம் தற்போது 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இதன் மூலம் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படங்களில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதல் 5 இடங்களில், “அவதார் 1, அவஞ்சர்ஸ் என்ட்கேம், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ் - த போர்ஸ் அவேக்கன்ஸ், அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்” ஆகிய படங்கள் உள்ளன.
‛அவதார் 2' இதுவரையில், மொத்தமாக 2.04 பில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் 598 மில்லியனும், உலக அளவில் 1.43 பில்லியனும் இப்படம் இதுவரை வசூலித்துள்ளது. குறைவான நாட்களில் 2 பில்லியன் டாலர் வசூலித்த இரண்டாவது படம் என்ற பெருமையையும் இப்படம் பிடித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் நிகர தொகையாக 390 கோடி வரை வசூலித்துள்ளதாம். சுமார் 150 கோடிக்கு இந்திய உரிமை விற்கப்பட்டுள்ளது. அதனால் படத்திற்கான லாபம் மட்டுமே 240 கோடி என்கிறார்கள். ஏறக்குறைய 150 சதவீத அளவிற்கு படம் வருமானத்தைக் கொடுத்துள்ளது.