பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'வாரிசு' படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் தமிழில் வெளியானது. நேற்று ஜனவரி 13ம் தேதி ஹிந்தியில் வெளியானது. இன்று ஜனவரி 14ம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. அதோடு ஆந்திரா, தெலங்கானாவில் 'வாரிசு' தமிழ்ப் பதிப்பும் வெளியாகிறது.
இந்த வருட பொங்கலுக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களுடன் இந்த 'வாரிசு' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்து கடந்த சில வாரங்களாக கடும் சர்ச்சைகளும் எழுந்தது. இந்நிலையில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக 'வாரசுடு' வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அதன் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்தார்.
அதனால், பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்கள் வெளியானதற்குப் பின் இன்றுதான் 'வாரசுடு' வெளியாகிறது. அதே சமயம் பாலகிருஷ்ணா படத்தை விடவும் இன்று அதிகமான தியேட்டர்களில் 'வாரசுடு' வெளியாவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தில் மட்டும் இன்று 'வாரசுடு' படத்திற்கு 300க்கும் மேற்பட்ட காட்சிகள் நடைபெற உள்ளது என்கிறார்கள். படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்குத் திரையுலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.