லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழகத்தைத் தவிர இதர தென்னிந்திய மாநில நகரங்களில் பெங்களூருவில்தான் அதிகமான தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் வெளியாகும். இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் 'வாரிசு, துணிவு' ஆகிய இரண்டு படங்களுமே அங்கு அதிக தியேட்டர்களில் வெளியாகின்றன. அவற்றிற்கான முன்பதிவுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன.
அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்திற்கு அதிகாலை 2 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. ரஜினிகாந்த்திற்குப் பிறகு அஜித் படத்திற்குத்தான் இவ்வளவு அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றதாம். அஜித் நடித்துள்ள ஒரு படத்திற்கு அதிகாலையில் காட்சி நடப்பது இதுதான் முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
இதுவரையிலும் லட்சுமி, கிருஷ்ணா, பாலாஜி, வைபவ், சீனிவாசா ஆகிய தியேட்டர்களில் 2 மணிக்கான காட்சிகளின் முன்பதிவு முழுவதுமாக முடிந்துவிட்டதாம். அதன் மூலம் மட்டுமே 20 லட்ச ரூபாய் வரையில் வசூலாகியுள்ளது என்கிறார்கள். அதிகாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் பல தியேட்டர்களில் காட்சிகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் மட்டும் 40க்கும் மேற்பட்ட சிங்கிள் தியேட்டர்களிலும், 50க்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் 'துணிவு' படம் வெளியாகிறது.