அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஹாலிவுட் படம் 'அவதார் - த வே ஆப் வாட்டர்'. இப்படம் இதுவரையில் இந்தியாவில் ரூ.450 கோடி வசூலைக் கடந்து, இங்கு அதிக வசூலைப் பெற்ற ஹாலிவுட் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளது. இதற்கு முன்பாக 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' படம் 438 கோடி ரூபாய் வசூலுடன் முதலிடத்தில் இருந்தததை 'அவதார் 2' முறியடித்துள்ளது.
மேலும் உலக அளவில் 1.7 பில்லியன் யுஎஸ் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14060 கோடி வசூலை 'அவதார் 2' பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் 'அவதார் 2' படம் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 527 மில்லியன் யுஎஸ் டாலர், உலக அளவில் 1.19 பில்லியன் யுஎஸ் டாலர் தொகை இப்படம் வசூலித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இப்படம் 'ப்ரேக் - ஈவன்' புள்ளியைக் கடந்துவிட்டதாக அதன் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். இதற்கடுத்த அவதார் சீரிஸ் படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் என்றும் கூறினார். 'அவதார் 3' படம் 2024 டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது.